துடில்லி: காங்., கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாழ்த்தி வரவேற்றுள்ளார்.
ம.பி.,யில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று, சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலருமான ஜோதிராதித்ய சிந்தியா, முதல்வர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் கமல்நாத் முதல்வரானதால் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய அவர், நேற்று(மார்ச் 11) டில்லியில், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.
பா.ஜ.,வில் இணைந்த சிந்தியாவுக்கு அமித் ஷா வரவேற்பு