தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி - சவரன் ரூ.1,096 குறைந்தது

சென்னை : கொரோனா அச்சம் காரணமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வந்த வேளையில் அதன் பாதிப்பு மெல்ல குறைய தொடங்கி வருகிறது. சில தினங்களாக சிறிய அளவில் ஏற்ற - இறக்கத்தை சந்தித்தது. இன்று(மார்ச் 13) ஒரேநாளில் சவரன் ரூ.1,096 குறைந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ.137 குறைந்து ரூ.4,020க்கும், சவரன் ரூ.1,096 குறைந்து ரூ.32,160க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.42,280க்கும் விற்பனையாகிறது